பூனைக்கு மீசை முளைத்து விட்டது/அழகியசிங்கர்

என்பா 106

பூனைக்கு மீசை முளைத்து விட்டது
எனக்கு இன்றுதான்
தெரிய வந்தது
தற்செயலாய்ப் பார்த்தேன்
பூனையின் மீசையை
காணாமல் போய்விட்டது பூனை

என்பா 107

பூனைக்கு மீசை முளைத்து விட்டது
என்றாவது பார்த்திருக்கியா
என்று கேட்டார்
பூனையை சரியாய்
பார்த்ததில்லை என்றேன்
என்னையும் சரியாய்ப் பார்த்ததில்லை

என்பா 108

பூனைக்கு மீசை முளைத்து விட்டது
பூனையின் மயிர்
உதிர்ந்தால் ஆகாது
மனைவியின் கூற்றில்
உண்மை இருக்குமா?
மீன்காரி எப்போது வருவாள்