பாவேந்தர்/கோ.முத்துசுவாமி

பாரதியின் தாசன்எனப் பெருமை கொண்டாய்;
பகுத்தறிவுப் பாசறையின் புதுமை கண்டாய்!
கூரியவாள் சொற்களினால் மடமை யாட்டம்
கொளுத்தியநீ, தமிழ்மண்ணின் தனிப்பண் பாட்டின்
வேரறிந்தே குடும்பவிளக்(கு) அதனை வார்த்தாய்;
வண்டமிழில் காவியத்தின் ஒளியை மீட்டாய்!
நேரியதோர் கவிஞர்பரம் பரையை உன்போல்
நிறுவியவர் யாருளரோ? வாழ்க உன்பேர்!