பாவேந்தர் பாரதிதாசன்/கு.மா.பா.திருநாவுக்கரசு

பூவேந்தும் சொற்களினால் புதுமை(க்) கொண்டு
புரட்சிமிகும் கருத்துகளால் தமிழன்னைக்கு,
நாவேந்தும் நயம்மிக்க கவிதை யாத்து
நற்றமிழில் மரபுவழி பெருமை சேர்த்து,
ஆவேந்தும் மடியாக அமுத ஊற்றை
அனைவருக்கும் ஊட்டுமவர் நூல்கள் எல்லாம்,
பாவேந்தர் தீட்டிவைத்த அறிவுச் செல்வம்;
பைந்தமிழே! மாகவியை நினைவு கூர்வோம்!