அறமே அறமாம்; அறமே அரணாம்/கோ.முத்துசுவாமி

அறமே அறமாம்; அறமே அரணாம்;
அறமே திறமாம்; அறமே உரமாம்;
அறமே விரதம் ஆனால் வரமாம்;
அறமே தருமாம் அகத்தில் நிறைவே!

*************


‘அறமே அறமாம் அறமே அரணாம்’
மரபுக் கருத்தில் புதிய என்பா
எழுதச் சொன்னால் எப்படி ஐயா?
எளிய தலைப்பை நாளை கொடுங்கள்!
எழுதித் தள்ளுவோம் என்பா முன்போல்!