“ம்” !/பி. ஆர். கிரிஜா

பிறந்தும் தவழ்ந்தும்
நடந்தும் வளர்ந்தும்
படித்தும் கேட்டும்
கொடுத்தும் வாங்கியும்
சொல்லும் செயலும்
இனிமையும் பண்பும்
அன்பும் அரவணைப்பும்
நட்பும் தோழமையும்
பரிவும் மாண்பும்
திகையும் வாழ்வும்
தரும் மகிழ்ச்சி!
ம்…. அதுவும் பேரானந்தம் !