ம்/செ.புனிதஜோதி

எப்போதுமில்லாமல்
என்னிடத்தில்
அதிகப்படியாக உரையாடிக்கொண்டிருக்கிறாய்
எங்கோ
அடிபட்ட வலியை
கரைக்க முற்படுகிறாய்
எதிர்வினையின்றி
ம் கொட்டிக்கொண்டிருக்கிறேன்
ம் யை மருந்தென
நிரப்பிய பின்
உன் விழிகளில்
கசிகிறது
ஓராயிரம் நன்றிகள்