
கை படாத புத்தகங்கள்.
வாங்கி வந்த புத்தகங்கள்,
பரிசென பிரியமுடன் வந்தவை,
இலவசமாய் வந்தவையென
புத்தக வனமே வீட்டீற்குள்.
கைகூடப் படாத புத்தகங்களை
நினைத்தாலே மலைப்பு.
சமூக வலை தளங்கள்,
தூக்கம், சோம்பல்,
வாழ்க்கைப் பந்தய ஓட்டமென
சொல்வதற்கு காரணங்கள் பல.
இன்று முதல் ஆரம்பித்தாலும்
வாசித்து முடிக்க வாழ்நாள் போதுமோ?
தெரியவில்லை.
உலகபுத்தக தினத்திலாவது
தினமும் 10 பக்கம்
வாசிக்கத் தொடங்கலாமென ஆசை.
மகள் சொல்வது நினைவு வருகிறது.
“அப்பா, உன் நினைவாக
நான் என்ன எழுதி வைப்பேன்
தெரியுமா ?
வாங்கிய புத்தகம்,
வந்த புத்தகம்
எல்லாமும் சேர்த்து,
வாசித்தது கையளவு,
வாசிக்காதது கடலளவு.
இனியேனும்,
புத்தகக் கடலில்
நீந்தியபடி, நிம்மதியாய்
வாசித்துக் கொண்டிரு.”
