ஜோ ரோகன் (Joe Rogan) ஸ்பாட்டிபையில் புகழ் பெற்ற சேனலை நடத்தி வருகிறார்/நியாண்டர் செல்வன்

ஜோ ரோகன் (Joe Rogan) ஸ்பாட்டிபையில் புகழ் பெற்ற சேனலை நடத்தி வருகிறார். சுமார் 1 கோடி பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியில் இந்த வாரம் அவர் பேசியது கடும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது

எகிப்தில் உள்ள கீஸாவில் உள்ள கிரேட் பிரமிடு கட்டப்படதற்கு சொல்லும் கணக்கு எதுவும் சரியாக இல்லை என்றார் ஜோ ரோகன். அந்த சர்ச்சையில் நுழையுமுன் கிரேட் பிரமிடு பற்றி சில செய்திகளை பார்க்கலாம்.

எகிப்தின் கீசாவில் உள்ள கிரேட் பிரமிடு கிமு 2560ல் கட்டபட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது கட்டபட்டு அடுத்த 4000 ஆண்டுகளுக்கு அதை மிஞ்சும் உயரத்துக்கு எந்த கட்டிடத்தையும் மனிதனால் கட்டமுடியவே இல்லை.

அந்த பிரமிடு கட்டபட்ட காலத்தில் சக்கரமே கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 500 கிமி தொலைவுக்கு கற்கள் பாலைவன மணலில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுவும் ஒவ்வொரு கல்லும் சுமார் 2.5 டன் முதல் 15 டன் எடை கொண்டவை.

1 லட்சம் பேர் 20 ஆண்டுகள் உழைத்து பிரமிடு கட்டப்ட்டதாக கிமு 450ல் வாழ்ந்த கிரேக்க அறிஞர் ஹெராடடஸ் கூறியது தான் ஏற்கபட்டுள்ளது. அன்றைய எகிப்தின் மக்கள் தொகை 15 லட்சம் பேர்.

இந்த கணக்கு தான் சரிப்பட்டு வரலை என்கிறார் ஜோ ரோகன்.

“500 கிமி தொலைவுக்கு தலா 2.5 டன் முதல் 15 டன் வரை எடைகொண்ட கற்களை பாலைவன மணலில் சக்கரம் இல்லாமல் நகர்த்திக்கொன்டு வந்து கட்டிடம் கட்டியிருக்கமுடியுமா” என்பதுதான் அவரது கேள்வி

இதை முன்வைத்து தான் முன்பு ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என பரபரப்பாக சர்ச்சை எழுந்து அடங்கியது. பிரமிடுகளுக்கான் கற்களை மரப்பலகைகள் மேல் வைத்து கயிறுகட்டி பாலைவன மணலில் சறுக்கு போல இழுத்து வந்ததாகவும், மைல்கணக்குக்கு சாரம் கட்டி மேலே ஏற்றியதாகவும் ஏலியன் தொழில்நுட்பம் அவசியமே இல்லை எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறர்கள்.

ஜோ ரோகன் “இளைய டிரையாஸ் தியரி”(Younger Dryas) யை மேற்கோள் காட்டுகிறார். 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் உயர்ந்த நாடுகள் உருவாகி இருந்தன. அப்போது உலகில் பனியுகம் இருந்தது. விண்கற்கள் விழுந்து பனி உருகியது. பைபிள் உள்ளிட்ட பல நூல்களில் சொல்லபடும் ஊழிபெருவெள்ளம் அந்த பனி உருகியதால் வந்த வெள்ளபெருக்கு தான் என்கிறார் ஜோ. இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரை பரவி இருந்த சுந்தேன்லாந்து கண்டமே அதில் மூழ்கியது

ஆனால் எகிப்தில் மட்டுமே அந்த தொழில்நுட்பங்களை எப்படியோ காப்பாற்றி வைத்திருந்து அதை வைத்து பிரமிடுகளை கட்டினார்கள் என்கிறார்

யாரும் என்ன வேணாலும் சொல்லலாம்..ஆதாரம் வேணுமில்ல? என்கிறார்கள் விஞ்ஞானிகள்

ஆக ஏன்சியன்ட் ஏலியன் சர்ச்சை மாதிரி “இளைய டிரையாஸ் சர்ச்சை” ஒண்ணு புதுசா உருவாகி இருக்கு. இனி இதை வெச்சு எத்தனை சினிமா படம் எடுக்கபோறாங்களோ?

~