கல்யாண்ஜி கவிதை

இப்படியும் பூ மலரும்.
இப்படியும் பூ உதிரும்.
பூ மலரும் காலத்தே
பூ உதிர்ந்து
பூ உதிர்ந்த பின்னாலும்
பூ மலர்ந்து
இப்படித்தான் வாழ்கின்றேன்
ஏதோ ஒரு பூ மரமாய்.