
பதின்மூன்று படிகள் உள்ள
மூங்கில் ஏணி ஒன்று எங்கள் வீட்டில் இருந்தது.
சக்கை இளகி ஆட்டம் கொடுக்கும்
ஐந்தாம் ஆறாம் படிகள்.
வெள்ளையடிப்பில் சிந்திய சுண்ணாம்புச் சுட்டிகளையும்
ஐந்தாம் ஆறாம் படிகளையும் பற்றி
இவனிடம் நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
ஆகாயம் இன்று இளம் நீலமாக இருக்கிறது.
