
தண்ணீருக்கு நித்தம்
யுத்தம் செய்யும் நாம்
கண்ணீர் விடும் காலமிது.
தந்தை செய் குற்றங்கள்
சந்ததியைத் தாக்குமாம் இங்கே
நம்மவர் செய்தவை
நம்மையே தாக்குதே இறைவா
இறைஞ்சியும் மனமில்லையா உனக்கு.
நாங்கள் கொடூரமாகக்
காட்டை அழித்தோம்
மரங்களைச் சாய்த்தோம்
நீர்வளம் மாய்த்தோம்
ஊர்வன பறப்பன நடப்ப,ன
என்று
எதையும் விட்டு
வைக்காமல் அழித்தோம் .
இந்நிலை தொடரின்
தண்ணீர் கிடைக்காது
கண்ணிலே செந்நீர் வந்திடுமே.

சீரும் சிறப்பும் சேர்க்கும் இயற்கை
சீறினால் தெரியும் அதன் இயற்கை
இயற்கையை அழிக்கிறான்
செயற்கை மனிதன்
முயற்கால் மூன்றெனும் குதர்க்க விநோதன் எனும் நிதர்சன உண்மையைத் ” தண்ணீர் கண்ணீர்” கவிதை வெளிப்படுத்துகிறது. வெகு சிறப்பு. இலத்தூர் கி.சங்கரநாராயணன்