கோடை/வேலாயுத  முத்துக்குமார் 

இந்தக் கோடையானது  

நிலத்தின் வறட்சி
மழைக்கான ஏக்கம்
துவர்ப்பின் வாசம் 
கொன்றைகளின் பருவம் 
பருகமுடியாத வெயிலமுது  
மாம்பழத்தின் சுவை 
நிராகரிக்கப்பட்ட காதலின் 
மனப்புழுக்கம் 
இந்தக் கோடையானது  
கோடை எனும் 
ஒற்றைச்சொல்லில் அடங்காது 
வியாபித்திருக்கின்ற
இன்னொரு கோடை