பாவம்/வளவ. துரையன்

விடாமல் பெய்த மழை இப்பொழுது நின்றுவிட்டது.

சிறு குழந்தையின் சிணுங்கல் போல் லேசான தூறல்கள்.

காக்கைகள் மகிழ்ச்சியுடன் பறந்து திரிகின்றன.

அணில்கள் ஓரிடத்தில் இருக்காமல் துரத்தல் விளையாட்டு.

உடலை உதறியபடி மின்கம்பிகளில் சிட்டுக் குருவிகளின் வரிசை

எதிர்வீட்டு மாடியில் காதல் உணர்வுடன் மஞ்சள் அலகுகளை உரசும் மைனாக்கள்

தலையை முந்தானையால் முக்காடிட்டவாறு வேலைக்குச் செல்லும் பெண்கள்

முதுகில் சிற்றருவியாய் நீர் வழியக் கறந்துவிட்டு அனுப்பப்பட்ட பசுக்கள்.

பாவம்.

தெருநாய்தான் ஒண்ட இடம் தேடி இங்குமங்கும் அலைகிறது.