
உங்கள் தனிமையை
எங்கே தொலைப்பதென
அறியாமல்
அங்கே தொலைத்திட வந்தீர்கள்
பலநாட்களாக
வெறுமையோடுக்
கரம்குலுங்கிக் கொண்டிருந்தவன்
நீங்கள் அடித்து
விளையாடும்
அழைப்பு மணி
உடலெங்கும் ஊறும்
புழுவின் நமைச்சல்
வெறுமையும்
தனிமையும்
அகோர உருவமெடுக்கும்
புயல் என்பதை
நீங்களும்
நானும் அறியவில்லை
