மெய்யின் ரகசியங்கள்/செ.புனிதஜோதி

எங்கோ இசைக்கும்
பக் பக்ஒலியை
காற்றின் விரல்கள்
அழைத்து வந்திருந்தது
எனக்குள்ளிருக்கும்
தூரிகைக்காரன்
உருவத்தை வரைந்து
பரிசளித்துச் செல்கிறான்
இப்போது என் முற்றத்தில்
புறா
பறந்துக் கொண்டிருக்கிறது

அவ்வவ்போது
பெயர் தெரியாத
ஒலியை
வரையமுடியாத
தூரிகைக்காரனை
முறைத்தபடி
சில பறவைகள்
நடந்துசெல்கின்றன

பறவைகளோடு
வாழ வரமளித்துள்ளது
இந்த அதிகாலை.