மே தினமே வருக!/சசிகலா விஸ்வநாத்

எப்போதும் என்
நலம் நோக்கும்

மல்லிக்கு காலை
சிற்றுண்டி காஃபி;

மகிழ்வுடன் இரண்டு
நாள் விடுமுறை!

மே தினமே வருக!

*************

தன்னலம் கருதாமல்,
என் தாய்

நலம் பேண வந்த நரஸம்மாவிற்கு,

தொலைபேசியில் கண்ணீருடன்
நன்றி சொல்ல,

மே தினமே வருக!
**********

பசுமை புரட்சி
பதிவாய் ஓங்க…

வெண்முரசு ஒலி
பெருகி பரவ..

செங்கொடி உயர
உயர பறக்க…

மே தினமே வருக!

***********
மருதன் மகளும்
மருத்துவம் படிக்க..

இருளன் மகன்
விமானம் ஏற…

சொக்கனும், குப்பனும், சீருடை அணிய,

மே தினமே வருக!

*****(*****

பசுமை புரட்சி
பதிவாய் ஓங்க…

வெண்முரசு ஒலி
பெருகி பரவ..

செங்கொடி உயர
உயர பறக்க…

மே தினமே வருக!