சாருநிவேதிதா சுஜாதாவைப் பற்றி…

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில் பணம் இல்லை. வசித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு குடியிருப்பை விற்றால்தான் பணம். அதை விற்றா மருத்துவம் பார்க்க முடியும்? ஒரு சமயம் மணி ரத்னம் பணம் கொடுக்க, இன்னொரு அட்டாக்கின் போது கமல் பணம் கொடுத்தாராம். ஷங்கர் போன்ற மெகா பட்ஜெட் இயக்குனர்களின் படங்களுக்கு வசனம் எழுதிய ஜாம்பவானுக்கே இந்த நிலை. காரணம் என்னவென்றால், சினிமாவில் நாம் கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி கந்துவட்டிக்காரர்களைப் போல் இல்லாவிட்டால் பணம் தர மாட்டார்கள். தரவே மாட்டார்கள். ஒரு பிரபலமான எழுத்தாளர் ஒரு பிரபலமான இயக்குனருக்கு வசனம் எழுதியதற்கு அந்த எழுத்தாளர் சென்னை வரும் போதெல்லாம் ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுத்தாராம் இயக்குனர். அதுதான் கட்டணம். சுஜாதா வசனம் எழுதிய படங்களுக்கெல்லாம் ஒழுங்காகப் பணம் கொடுத்திருந்தால் அவருக்காக ஏன் மணி ரத்னமும் கமல்ஹாசனும் பணம் கொடுக்க வேண்டும்? அவருடைய புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர்களோ தீபாவளிக்குத் தீபாவளி அவருக்குப் புதிதாக வேட்டி சட்டை எடுத்துக் கொடுப்பார்களாம். அதற்குப் பிறகுதான் உயிர்மை, கிழக்கு எல்லாம் வந்து அவருக்குக் காசு கொடுக்க ஆரம்பித்தார்கள். பத்திரிகையிலிருந்து லட்சம் லட்சமாகப் போயிருக்கும் என்று நினைத்தேன். அதுவும் தப்பு. ஒரு அத்தியாயத்துக்கு 150 ரூபாய்.

(முக நூலில் ஆர.கந்தசாமி 05.05.2023 அன்று பதிவு செய்துள்ளார்)

2 Comments on “சாருநிவேதிதா சுஜாதாவைப் பற்றி…”

  1. சேர்ந்தே இருப்பது வறுமையும்,புலமையும்.அல்லது அறிவுள்ளவர்கள் பணம் சேர்த்தலில் ஆர்வம் இருக்காது

Comments are closed.