
கவிதை எழுத நேரம் இல்லை
கட்டைப் பஞ்சாயத்தும்
செய்வதில்லை
பரிசில் தந்து
பணிப்போரும் இல்லை
சும்மா இருத்தல் சுகமே.
கவிதை எழுத
நேரம் இல்லை
கற்பனைக் கொன்றும்
குறையும் இல்லை
பதவிப் பொறுப்பின்
குறுக்கீடும் இல்லை
பெறுவேன் ஓருநாள் பெருமை.
கவிதை எழுத நேரம் இல்லை
காலம் வெல்லும்
கவிதை சொல்வேன்
காத்திருப்போர் மட்டும் கவனம் கொள்வீர்
வருமே வருநாள் வெற்றி.

உண்மையைச் சொல்கிறேன். புதிதாகக் கவிதைகள் எழுத ஆர்வமும் கற்பனையும் இல்லை. ஆனால் என்பா தலைப்பு வந்தவுடன் கவிதைவரிகள் தானாக ஊற்றெடுத்து வருகின்றன. நன்றி இலத்தூர் கி.சங்கரநாராயணன்
கட்டை பஞ்சாயத்து,பரிசில்,பதவி பொறுப்பு மற்றும் காத்திருந்தால் கவிதை வரும்!