அழகியசிங்கர் என்பா கவிதைகள்

என்பா 117

பெங்களூரில் உறவினர்
வீட்டிற்குச் சென்றேன்
கவிதை எழுத
நேரம் இல்லை
பேசுவதைக் கேட்டுக்
கொண்டே இருக்கிறேன்
பேச்சுதான் நடந்து கொண்டிருக்கிறது

*********

என்பா 118

கவிதை எழுத நேரம் இல்லை
கவிதை எழுத நேரம்
இல்லை
மனதை கொடுக்க நேரம் இல்லை
ஒன்றும் செய்யாமல் இருக்கிறேன்

*************
எசன்பா 119

சும்மாதான் வீட்டில்
உட்கார்ந்திருக்கிறேன் நான்.
கவிதை எழுதவில்லையா
என்று கேட்டால்
கவிதை எழுத நேரம் இல்லை
என்றுதான் சொல்வேன் இப்போதும்

*********