
1.
நானும் கவிதையும்
தனித்து விடப்பட்டதில்
கவிதை எழுத நேரமில்லை என்றேன்
உன்னை எழுதவா என வெகுண்ட
கவிதை காணாமல் போனது!
**********
2.
அந்த வீதி நேரானதென
அறிவேன்
அந்த மேடை சீரானதென்றும் தெரிவேன்
மயிலறகுப் பொதியை
இரும்பெனப் புரிந்தேன்
கவிதை எழுத நேரமில்லை!
