கவிதை எழுத நேரம் இல்லை /சசிகலா விஸ்வநாத்

கவிதை எழுத நேரம் இல்லை ;

என்பதில்லை; என், இன்பம், துன்பம்,

வெற்றி, தோல்வி,
விருப்பு, வெறுப்பு,

அறிய யாருக்கு விருப்பம்?

********

சொல்லத்தான் நினைக்கிறேன்;
என் கவிதையில்.

கவிதை எழுத நேரம் இல்லை

நாளும் நான் எண்ணும் எண்ணங்களை;

பார்க்கும் எழில் வண்ணங்களை

************

கவிதை என்பது தானே பொங்குவது!

கவிதை தன்னைத் தானே செதுக்குவது;

கவிதை எழுத நேரம் இல்லை !

இயலாமையை இவ்வாறே சொல்லலாகுமோ?

*********
கவிதை எழுத நேரம் இல்லை !

மனையில் மங்கலமாய்
மகளின் திருமணம்.

மூச்சு விட நேரமில்லை; எனக்கு

கவிதை எழுத நேரமில்லை.

**********
தேன் சிந்தும் தேவாரப் பாடல்கள்

மனம் திருத்தும்
சித்தர் பாக்கள்

செல்லக் குழந்தையின்
விளையாட்டு கவிதை

எழுத நேரம் இல்லை !

***********
கவிதை எழுத நேரம் இல்லை .

லுஹருக்கு நகரா அடிக்கும் சப்தம்;

வாப்பா இப்பம்
வந்திடுவாரு‌
மனைக்கு..

சோறு கறி விளம்பணும்.