
1)கவிதை எழுத நேரம் இல்லை
புத்தகம் பேனா காகிதம் அழைக்கிறது
சிந்தனை கவிதையை நெசவு செய்கிறது
எனக்கு ஏனோ அக்கறையில்லை.
2)கவிதை எழுத நேரம் இல்லை
இது எதுக்கு வெட்டி வேலை
மனையியின் ஏச்சுக்கு உடன்பட்டுச் சொல்கிறான்
கவிதையில என்ன இருக்கு.
3)கவிதை எழுத நேரம் இல்லை
மது இருக்கு மாதுவும் இருக்கு
சாமரம் வீச ஆளும் இருக்கு
கவிதை யாருக்கு வரும்.
4)கவிதை எழுத நேரம் இல்லை
நீங்கள் எவ்வுளவு தான் சொல்லுங்கள்
அவன் அப்படித்தான் என்கிறேன் நான்
பாரதி மட்டும் விதிவிலக்கா?
5)கவிதை எழுத நேரம் இல்லை
இங்கு என்ன நினைப்பதுவா நடக்கிறது
வேறு என்ன சாக்கு சொல்வது
யானைக்கு இருப்பது தும்பிக்கை.
