கவிதை எழுத நேரம் இல்லை/கோ.முத்துசுவாமி

1.

கவிதை எழுத நேரம் இல்லை;
இன்பமும் துன்பமும் இறைவன் நாளும்
எழுதும் கவிதையாய் தொடர்ந்து நிகழ்வதால்
பொருள் காண்பதிலே போகும்

**********

2.’

கவிதை எழுத நேரம் இல்லை!
இயற்கை அன்னை விரிக்கும் கவிதைகள்
எங்கும் என்றும் இறைந்து கிடக்கையில்
வேறென்ன கவிதை சொல்ல?

*********

3.

கவிதை எழுத நேரம் இல்லை!
பணி ஓய்வினைப் பெற்ற பின்பும்
கடமைச் சுமைகள் விடாது சாய்க்கும்;
கற்பனை ஈரம் காயும்

**********

4.

கவிதை எழுத நேரம் இல்லை
என்று சொல்லியே எழுதினேன் சிலவே;
கவிஞன் என்றே ஆன பின்பு
எங்ஙனம் எழுதாமல் இருக்க?