குட்டி இளவரசன்/அந்த்வர்ன் து செந்த் எக்சுபெரி/ரமேஷ் கண்ணன்

மலையாளத்தில் ராமகிருஷ்ணன் குமரநல்லூர்

தமிழில் யூமா வாசுகி

நாம் யாரும் பார்க்க வேண்டியதைப் பார்ப்பதில்லை .
நாம் நேசிக்கிற ஒரு பூ நட்சத்திரத்தில் இருக்கிறது என்று அறிந்தால் அந்த நட்சத்திரத்திற்காக இரவில் நாம் ஆகாயத்தை பார்ப்போம் தானே?

ஒவ்வொரு நட்சத்திரமும் இப்படிப்பட்ட பூக்களால் நிறைந்தது தானே?

அப்போது எல்லா நட்சத்திரங்களையும் நீங்கள் நேசிக்க தொடங்குவீர்கள் எல்லாம் உங்களுடைய நண்பர்களாகும்

இதைச் சொல்லிவிட்டு குட்டி இளவரசன் மீண்டும் புன்னகைத்தான் .

மனிதர்களில் பலவகையானவரைக் குட்டி இளவரசன் சந்திக்கிறான்.அவனுக்கும் அவர்களுக்குமான உரையாடல் வழி மனித வாழ்வைப் பகடி செய்கிறான்.அதில் ஏதோவொரு இடத்தில் நம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்கிறோம்.

பூமி

இங்கே நூற்றுக்கணக்கான ராஜாக்களும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும் இலட்சக்கணக்கான குடிகாரர்களும் கோடிக்கணக்கான தற்பெருமைக் காரர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால் இதன் பரப்பளவு உங்களுக்குப் புரியும்

—– குட்டி இளவரசன்

குட்டி இளவரசனைக் குழந்தைகள் படிப்பதை விடப் ‘பெரியவர்கள்’ முதலில் படிக்க வேண்டும்.