
உறங்கப் போகலாமென
வாசிப்பு அறையின் விளக்குகள் அணைக்க இருக்கையில்
கேட்கிறது
சன்னல் அருகே
மியாவ் மியாவ்
வாசல் புறம்
மாடிப் படிக்கட்டுகளில்
ஆரோகண
அல்லது
அவரோகண
வேலையில் இருக்கிறார் பாவம் பூனையார்
அதனூடே
மியாவ் மியாவ்
சன்னல் கம்பிகள் நெருக்கமானவை-
கொசுக்களுக்கு அஞ்சிக்
குறுக்கே வலைக் கதவுகள் வேறு…
பூனை உள்ளே வந்து விட முடியாது
ஆனாலும் கேட்கிறது
மியாவ் மியாவ்
திரைச் சீலையை நகர்த்தினால்
சன்னலருகே
நேர்ப்படிக்கட்டில்
எதிர்ப்படக் கூடும்
மீசைக்காரப் பூனை
விளக்குகள் அணைத்துப்
படுக்கைக்கு
இடம் பெயர்கிறேன்
அசத்தி இழுத்துப் போகிறது உறக்கம்
நழுவிப் போன மியாவ்
தொலை தூரத்தில் ஒலித்திருக்க
வலிக்காமல் அணைத்துக் கொள்கிறேன்
எந்தத் திறப்பும் தேவைப்படாது
கையருகே வந்து படுத்துக் கொண்ட
மானசீகப் பூனைக் குட்டியை….

அருமை ,
இனிமை
இரவு நேர கவிதை
பூனையுடன் உறக்கம்..
மோன நிலையில்
மயக்கம்…
கண்களில் பட்டதையும், காதுகளில் கேட்டதையும், மனதினில் பட்டதையும் பொதியை வடிப்பது ஒரு ஆற்றலே. வாழ்த்துக்கள்
வாசிக்க அமர்கையில்
பூனைக்கவிதை
குறுக்கே
படிக்கபட்டது….
—–சீனி குலசேகரன்
அழகிய சம்பவம் சன்னல் பூனையில் தொடங்கி மானசிக பூனையுடன்
உங்கள் அருமையான. படைப்பிற்கு நல் வாழ்த்துகள். ! நண்பரே. !
மியாவ் மியாவ்
நன்கு பழகும் தன்மைக்கே உண்டு
மீசைக்கார பூனையுடனான
அதீத பாசம். அருமை!
மிகவும் அருமையான கவிதை.
பூனை பற்றிய கவிதை நம் அன்பின்
வெளிப்பாடு
காற்றினால் வரும் கீதமானதோ?
மியாவ்…மியாவ்..