
(இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை)
தூரத்துச் சொந்தமாயும்,
மனசுக்கு நெருக்கமாயும் ஆன உறவினரின் இல்லவிழா, ஊருக்கு வெளியே.
பட்டுப்புடைவையணிந்து
பஸ்ஸில் போக முடியாதென,
ஆட்டோவில் பயணம்.
விழா முடிந்து, உடைமாற்றி,
பட்டுப்புடவை, பட்டுவேட்டி, மகளின் உடையைல்லாம் மடித்து
துணிப் பையில் வைத்து
மறுபடியும் ஆட்டோ பயணம்.
உறவினர் வீட்டுத் தாம்பூலப் பை,
வழியில் வாங்கிய
பலசரக்குப் பை,
கைப் பை எனத் தூக்கி,
ஆயாசமாய் வீடு சேர்ந்தபின்,
தேநீர் குடிக்கும் போது,
“துணிப் பை எங்கே?”
உன் கையில், என் கையில், என
மாற்றி மாற்றி வாதம்.
புடவை வேட்டி விலை சொல்லிச் சொல்லி மீண்டும் சண்டை.
ஆட்டோக்காரன் கொணர்ந்து தருவானோ எனும்
நப்பாசையும்
பலிக்கவில்லை.
இரவுணவு சாப்பிட அமர்ந்த போது,
தொலைபேசி சிணுங்கியது.
மறந்து போய்
பலசரக்குக் கடையில்
வைத்த துணிப் பை
வந்து வாங்கிக் கொள்ளவும் என
உறவினர் சொன்னதும்,
பளிச்சென வெளிச்சம்.
நம்பிக்கை பூத்தது.
.
