மனம் ஒரு வீடு/விஜயலட்சுமி கண்ணன்

ரம்யாவும் ரகுவும் சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை வருகிறார்கள் என்று தகவல் தெரிந்தது முதல் சிவகாமிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் துள்ளிக் குதித்தது, சொல்ல முடியாத எண்ணங்கள் அலை அலையாக வந்து போயின.

இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்ஆரத்தி கரைத்து வைத்து , மஞ்சள் குங்கும சிமிழை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்,
பின்புறத்தில் இருந்து கணவர் சிவராமன் “என்ன ரொம்ப குஷி, பிள்ளையும் சிங்கப்பூர் மருமகளும் வரதால் கால் தரையில் நிற்கவில்லையோ?”
“ஆமாம், உங்களுக்கு எப்பொழுதும் கிண்டல் செய்யும் வழக்கம். உங்களுக்கு மட்டும் குஷி இல்லையா? நீங்க அமைதியா இருக்கீங்க,உங்கள் சுபாவம். நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுபவது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தானே.”பதில் அளித்தார் சிவகாமி.
“இந்த வீடு வாங்கி கொண்டு வந்து நாம் ஒரு வருடம் ஆகிறது. பால் காய்ச்சக் கூட குழந்தைகள் வரவில்லை. இப்போ தான் டைம் வந்திருக்கு.”
“அதுக்கு என்ன சிவகாமி, வந்தவுடன் பால் காயிச்சி விடு, அவ்வளவு தானே “மீண்டும் வம்புக்கு இழுத்தார்.

சிவராமன் எளி மையான மனிதர். நல்ல நகைச்சுவை நிறைந்த அனுபவசாலி.

தென்னக இரயில்வேத் தலைமை செயலகத்தில் இருந்து 35 ஆண்டுகள் எந்த குற்றம் குறையும் இல்லாமல் அமைதியாக பணி யாற்றி ,இரண்டு ஆண்டுகள் முன் ஓய்வும் பெற்றார்.ஒரு அன்பு குடும்பத்தில் இருந்து பிரிவதை போன்ற உணர்வு அவருக்கும் ஏற்ப பட்டுது. திருப்தி அடையும் மனப்பக்குவம் கொண்டவர்.
ஒய்வு பெற்ற பிறகு முதல் வேலையாக தங்களுக்கு இருக்க ஒரு வீடு வாங்க வேண்டும் என்று முனைந்தார்.இதுவரையிலும் இரயில்வே குவார்ட்டர்சில் காலத்தை ஒட்டியகிவிட்டது.
பணமும் ரொக்கம் கையில் இருந்தது. ஓய்வு ஊதியம் நல்ல தொகை அவர்கள் இருவருககும் நன்றாக வாழ முடியும்.

மந்தவெளியில்
தனி வீடு வாங்கி கொண்டு குடி புகுந்து விட்டார். எளிமையான சிறிய வீடு. போதும் என்ற மனமே பொன் செய்ய விரும்பும்.
சிவகாமிக்கு மிகுந்த சந்தோஷம்,மன நிறைவு.
குழந்தைகள் வர வேண்டும் என்று மட்டும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
அந்த நாளும் வந்து விட்டது.
ரகு நான்கு ஆண்டுகள் முன் வேலை ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் சென்றான். அங்கே கூட வேலை பார்த்த ரம்யா அந்த நாட்டு குடிமகள். சிங்கப்பூர் தமிழர்கள்.அவளுடைய அப்பாவும் அம்மாவும் இருவருமே மருத்துவர்கள்.
ரம்யாவின் சுபாவம், வேலை பார்த்த விதம் எல்லாமே ரகு ரசித்தான்.
ரகுவின் தன் நம்பிக்கை, அயராத முயற்சியினால் உழைப்பு யாவும் ரம்யாவை கவர்ந்தது. பிறகு என்ன?
அப்பா அம்மாவுக்கு ரகு தன் விருப்பத்தை தெரிவித்த போது சற்று கவலை உலுக்கியது,எப்படி,என்ன சொல்வார்களோ என்று.
ரம்யாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்.
ரகுவின் அம்மா அப்பா இருவரும் ரம்யாவுடன் மனம் திறந்து தொலைபேசியில் பேசினார்கள். வீடியோ காட்சிகள் பரிமாறி கொண்டார்கள்.
இருபக்க சம்மதத்துடன் சிங்கப்பூரில் திருமணம் இனிதாக நிறைவு பெற்றது. நல்ல சம்மந்தி உறவு.சிவகாமியும் சிவராமனும் சிங்கப்பூர் தமிழர்கள் சங்கத்தில் திருமணத்தில் கலந்து கொண்டு
தாங்கள் செய்ய வெண்டிய
சம்பிரதாயங்கள் எந்த குறைவும் இல்லாமால் செய்த விதம் எல்லோருக்கும் பெருமையும் சந்தோஷத்தையும் கொடுத்தது.

சிங்கப்பூர் வீட்டை பார்த்து பூரித்த சிவகாமி நம்ம இந்த சின்ன வீட்டை பார்த்து மருமகள் என்ன சொல்வாள் என்று எண்ணினார்.
“அம்மா அப்பா “என்று ரகு அழைக்கும் குரல் கேட்டதும், சிவகாமி மகனையும் மரு மகளையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து,பின் வடக்கு புறமாக கொட்டிவிட்டு , மஞ்சள் குங்கும பொட்டு வைத்து உள்ளே அழைத்து வந்தனர். இருவரும் பெற்றோர்களை வணங்கி எழுந்தனர்.

காபியும் மெது வடையும் பரிமாறி விட்டு, “வாங்க, வீட்டை சுற்றி பாருங்க. சின்ன வீடுதான் ரகு.”என்றாள் சிவகாமி.
ரம்யா பார்த்து புன்னகை பூத்தாள். “அத்தை,இதை சின்ன வீடு என்று சொல்ல முடியாது.
தாராளமாக இருக்கு.
கீழே ஒரு பெரிய ஹால்,இரண்டு படுக்கை அறைகள்,இரண்டு குளியலறைகள் பூஜை அறை, நல்ல அகலமான,சமயல்அறை, தட்டு முட்டு சாமான்கள் போட ஒரு தனி அறை. வேற என்ன வேண்டும்?மேலே,மாடியில் ஒரே ஒரு படுக்கை அறை,குளியல் அறையுடன். மீதி இடம் மொட்டைமாடி .
சூப்பர் அத்தை “என்று பாராட்டின ரம்யாவை கட்டி பிடித்தபடி உச்சி முகர்ந்து பரவசப் பட்டாள் சிவகாமி.
“என்னடா ரகு, வாயே திறக்கவில்லை?”
அப்பா தான் கேட்டார்.
“அப்பா அம்மாவுக்கு எது சவுகரியம் அது தான் எங்களுக்கும் மன நிறைவு. வீடு உங்களுக்கு வேண்டிய அளவில் அம்சமாக இருக்கு. ரொம்ப பெரிய வீடு எல்லாம் வயதான போது பராமரிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. சிங்கப்பூர் வீடுகள் நம்மை போன்றவர்களுக்கு,சவுகரியம் நிறைந்து மாடர்ன் விதமாக இருக்கும் ஆனால் சிறிய வீடுகளாகத் தான் இருக்கும்”.என்றான் ரகு.
“ஆமாம் அத்தை “என்று ரம்யாவும் ஆமோதித்து சொன்னதனால்
சிவகாமிக்கு மிகுந்த சந்தோஷம்.
சிவராமன் “பார் சிவகாமி, ரகு சொல்ற. மாதிரி நாம் நமக்காக வாழ வேண்டும், மற்றவர்கள்க்காக
இல்லை.
குழந்தைகள் சரியா புரிந்து வைத்திருக்கிறார்கள். வீடு சின்னதனாலும்,
மனசு பெரிசு.
எளிமையான வாழ்க்கை என்றும் நிறைவை கொடுக்கும் சிவகாமி.”என்றார் சிவராமன்.
“சரி ,சரி, சாப்பிட வாங்க.எல்லாம் ரெடியா இருக்கு.
சூடா சாப்பிடுங்க.”என்றாள் சிவகாமி என்ற தாய்.