ஒரு நிமிடம்/அழகியசிங்கர்

கல்பனா தியாகு எப்போது வருவான் என்று காத்திருந்தாள். அவன் தெரு முனையில் வருவது தெரிந்தது.
அவள் வதனத்தில் மகிழ்ச்சி.
“உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்,” என்றாள் கல்பனா அவளைப் பார்த்து.
“எதற்கு?” என்று கேட்டான் அவன்.
“₹50000 பணம் உடனே வேண்டும்,” என்றாள் கல்பனா.
“இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்,” என்று அந்த இடத்தை விட்டுக் கிளம்பிப் போய்விட்டான்.