
சென்னை நகரத்தின் மெரீனா கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்த பகுதியில், ” ஒரு நிமிடம் ” என்று கூவிக் கொண்டிருந்த அந்த இளைஞன் அனைவரின் கவனத்தையும் தன் பால் ஈர்த்தான்.
” உங்களுடைய பொன்னான நேரத்தில் ஒரே ஒரு நிமிடத்தை எனக்காக ஒதுக்குங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றியமைப்பதற்காக ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதன் நான். உங்கள் கையிருப்பில் இருக்கும் சொற்பப் பணத்தை எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஏழு ஆண்டுகளில் இலட்சாதிபதி ஆக்குகிறோம்” என்று கூவிக் கூவி அழைத்துத் தங்கள் நிதி நிறுவனத்தின் புதிய திட்டத்தை விற்றுக் கொண்டிருந்த அந்த துடிப்பான இளைஞனைச் சுற்றி ஆர்வத்துடன் கூடிய கூட்டத்தின் தலைவிதி ஒரு நிமிடத்தில் கண்டிப்பாக மாறிவிட்டது.
அன்றைய நாள் , 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி. நேரம் சரியாக சென்னையை சுனாமி தாக்கிய அதே நேரம்.
