இன்றைய என்பா/சசிகலா விஸ்வநாதன்

1.

ஆலாய் பற,
அருகாய் சிறு

பெரும் பொருள்
தேர்ந்து அறிய,

நேர்த்தியான முயற்சியுடன்
கருத்தின் தெளிவும்,

குவிய,கையகப்படும்
வானம்.

2

நாவிற்கு இனிக்கும்
நாலடியார் பாடல்கள்;

கருத்துக்கு பொருள்
சேர்க்கும் மூதுரை;

அனைத்துக்கும் சிகரம்
விநாயகர் அகவல்;

ஔவையை படி தினம்.

3.

தர்க்கமிடும் பர சமயம் தோறும்

அதுவே நன்னூல்
என நாட்டுவித்த

பின்னரே,சிவ சமயமே, சால

சிறந்ததென அறிந்தான் குருபரன்.

4.
தேவர் தேனார் அமுதம் உண்டிட;

பரனுக்கு ஆலகாலம்
மட்டும் கிட்டிட;

பரமனும் தன்னூழ்
எனவே விழுங்கிட;

கண்டத்தில் இருத்தினாள்;
பாகம்பிரியாள்.

5.
கனலும் கோபத்தை
அக்கணமே தணித்தும்;

வஞ்சகம் உடையோரை
சமயம் பார்த்தும்;

ஆசான் ஆவேசத்தை
அவ்வமயமே பணிந்தும்;

நீக்கிட இன்பம் தங்கும்.

3 Comments on “இன்றைய என்பா/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.