
1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்
மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராது
வரம் தந்தவன் தலையில் கைவைக்க
நானொன்றும் தவம் செய்யவில்லை!
2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்
உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லை
பூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்
கழுதை கெட்டால் குட்டிச்சுவர்!
3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லை
ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துண்டு
என்ன நியாயம் என்ன தர்மம்
சூதாடி நாடுதானே பாரதம்!
4)மாலை மரியாதை அவ்வுளவு சுலபமா
வாழ்க்கையை அடகு வைக்க வேணும்
நீங்கள் நீங்களாகவே இருக்கக் கூடாது
பட்டும் பீதாம்பரமும் மனுஷனுக்கா!
5)நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்
ஒன்பது கோள்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள்
ஆளுக்கொரு நியாயம் ஊருக்கொரு நீதியா
யாகாவார் ஆயினும் நாகாக்க!
