அன்றாடத்தில் ஒரு நாள்/கலைச்செல்வி


பழுதில்லாமல் வளர்ந்து
பந்தலில் ஏறியிருக்கிறது நாட்டுப் புடலையின் கொடி.

எல்லாப் பூவும் பிஞ்சாவதில்லை
பிஞ்சாவதெல்லாம்
காயாவதில்லை நியதி இதுதான்.

கோணலாய்ப் போன சில பிஞ்சுகளுக்கு பழந்துணியின் கிழிசலில்
கல் கட்டிவிடுகிறாள்..

கோணல் வாழ்வை நேராக்குகிற மந்திரம் அம்மாவின் கையிலிருப்பது அதிசயமில்லை
அது எப்போதும்
அம்மாவாய் இருப்பதுதான் வரம்


1.6.2023