
வயது முதிர்ந்த படையாள் ஒருவன் முன்னொரு காலத்தில்
விடுமுறைக்காக சொந்த ஊர் போய்க் கொண்டிருந்தான். நடந்து
களைத்துப் போய்விட்டான், வயிறு பசித்தது. வழியில் கிராமத்துக்கு வந்ததும்
முதலாவது ஒரு குடிசையின் கதவைத் தட்டினான்.
‘வழிப்போக்கன், இராப் பொழுதைக் கழிக்க இடம் தாருங் கள்” என்று கேட்டான்.
கதவைத் திறந்த கிழவி, “படையாளே, வா அப்பா” என்று வரவேற்றாள்.
“அம்மணி, பசியால் வாடுகிறவனுக்குச் சாப்பிட எதாவது கிடைக்குமா?” என்று கேட்டான் படையாள்.
கிழவியிடம் யாவும் நிறையவே இருந்தன. ஆனால் அவள் ஒரு கருமி, பரம ஏழை மாதிரி பாசாங்கு செய்தாள்.
அட பாவமே, என்னிடம் எதுவும் இல்லை, விடிந்தது முதல் நான் உணவின்றி பட்டினியாய் இருக்கிறேன், என்ன செய்வேன்’ என்று புலம்பினாள் கிழவி.
”ஒன்றும் இல்லையானால், ஒன்றும் இல்லை தாள்,” என்றான் படையாள். பிறகு காம்பு இல்லாத கோடரி ஒன்று பெஞ்சுக்கு அடியில் இருந்ததைக் கவனித்ததும், “கோடரிக் கூழ் செய்யலாமே” என்றான்.
இரு கைகளையும் உயர்த்திக் கிழவி ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். “கோடரிக் கூழா? கேட்டறியாத அதிசயமாய் இருக்கிறதே!”
“ஒரேயொரு சட்டி மட்டும் கொண்டு வந்து கொடு நான் செய்து காட்டுகிறேன்.”
கிழவி ஒரு சட்டியைக் கொண்டுவந்து கொடுத்தாள். படை யாள் கோடரியைக் கழுவிச் சட்டியில் வைத்தான். பிறகு சட்டியில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.கிழவி வைத்த கண் வாங்காமல் படையாளைப் பார்த்துக்
கொண்டு நின்றாள்.
படையாள் ஒரு கரண்டியை எடுத்துக் கொதிக்கும் நீரை நன்றாய்க் கலக்கிச் சிறிதளவு வாயில் விட்டு ருசி பார்த்தான். “இன்னும் சிறிது நேரத்தில் தயாராகிவிடும், ஆனால் உப்புதான் இல்லை.”
“உப்பு என்னிடம் இருக்கிறதே. இந்தா கொஞ்சம் எடுத்துக்கொள்.”
படையாள் சிறிதளவு உப்பு போட்டு, மீண்டும் கொதி நீரை வாயில் விட்டு ருசி பார்த்தான்.
“ஒரு கையளவு கேப்பை போட்டோமானால் எவ்வளவு நன்றாய் இருக்கும் தெரியுமா?” என்றான்.•
உக்கிராணத்தில் ஒரு சிறு பையிலிருந்த கேப்பையைக் கிழவி கொண்டு வந்தாள்.
“இந்தா, வேண்டிய அளவு எடுத்துப் போடு” என்றாள். படையாள் மும்முரமாய் வேலை செய்தான். அவ்வப்பொழுது கூழைக் கிண்டிச் சிறிதளவு வாயிலிட்டு ருசி பார்த்தான். கிழவி கூட அவளால் பார்வையை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள்; கணப் பொழுது கூழ் தயாரானதும் படையாள் அதில் ஒரு கரண்டி அளவு சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, நன்றாய் அமைந்துவிட்டது” என்றான்.
‘கொஞ்சம் வெண்ணெயும் சேர்த்தோமானால், இந்தக் கூழைக் காட்டிலும் சுவையானது எதுவும் இருக்காது.
கிழவி வெண்ணெயும் கொண்டு வந்துவிட்டாள்.
‘நல்லது, ஒரு கரண்டி எடுத்து வா, இருவரும் உட்கார்ந்து சாப்பிடுவோம்!” என்றான் படையாள்.
இருவருமாய்க் கூழைச் சாப்பிட ஆரம்பித்தனர்; பிரமாதமாய் இருக்கிறதே என்று புகழ்ந்து கொண்டனர்.
‘கோடரிக் கூழ் இவ்வளவு நன்றாய் இருக்குமெனநான் நினைக்கவே இல்லை” என்று கிழவி வியந்து கொண்டாள்.
படையாள் உள்ளுக்குள் சிரித்தவாறு சாப்பிட்டான்.

kanchanam ..but beautifully tasty