பிரஸ்னோபநிடதம்/எஸ்ஆர்சி

துவிதிய பிரஸ்னா
வினா2

(பார்க்கவர் மற்றும் பிப்பலாதர்)

விதர்பியின் குமாரர் பார்கவா பிப்லாதரை இப்படி வினவினார்.

1.ஓ பகவானே எத்தனை தேவர்கள் உயிருள்ள ஒன்றுக்குத் துணை செய்கிறார்கள். அவர்களுள் யார் அதனை விளக்குவார்கள். பிறகு அவர்களுள் யார் பெரியவர்?
அவர் விடை சொன்னார்.
2.ஆகாயம்,காற்று, தீ, நீர், பேச்சு, மனம்,கண் மற்றும் காது இவர்களே தேவர்கள். அவர்கள் தங்கள் பெருமையை வெளிக்காட்டுகிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்குள் இந்த விஷயத்தில் பிரச்சனையும் உண்டு. நாங்கள் ஒன்றாக இருந்தே மனித உடலைக்காக்கின்றோம்.
3.பிராணன் சொன்னது.’ முட்டாள்தனமாய் மயக்கத்தில் தொலைந்து போகாதீர்கள். நானே ஐந்து பகுதியாகப்பிரிந்து இந்த உடலுக்கு ஆதாரமாகிப் பாதுகாக்கிறேன்’
4.பிராணனுக்கு அவர்கள் மேல் கோபம். தான் உடலைவிட்டுவிட்டு மேலே செல்வதாய்த் தீர்மானித்தது. பிராணன் சென்றவுடன் மற்றவைகளும் மேலே சென்றன.பிராணன் கீழே இறங்க மற்றவைகளும் இறங்கின.
ராணித்தேனீ வெளிச்சென்றால் பிறவும் அதனோடு சென்றுவிடுமே அதுபோல்.
ஆக மனம் பேச்சு கண் காது மற்றும் பிற இதனை ஆமோதித்து பிராணனைப்புகழ்ந்தன.
5.உயிர் அக்கினி போன்று எரிகிறது
கதிரவன் ஒளி வீசுவது போல
இந்திரன் ஆணையிட
மழை பெய்கிறது.
அப்படியே காற்று பூமி, சந்திரன் அனைத்தும்.
தேவ அமிர்தத்திற்கு உருவமுண்டு
அது அருவமுமானது, என்றுமிருப்பது.
6.ஒரு சக்கரத்தின் ஆரக்கம்பிகளைப்போல் பிராணனை மய்யத்தில் வைத்து ரிக் யஜுர் சாம யாகங்கள், க்‌ஷத்ரியர்கள் பிராம்ணர்கள் அதனைச்சுற்றியே இருக்கின்றார்கள்.

  1. உயிர்க்கடவுள் பிரஜாபதி
    கருவறையில் இயங்குபவன்
    பிறகே பிறப்பெடுப்பவன்.
    ஐம்புலன்களோடு வாழ்பவன் அவனே.
    அவனுக்கே உயிரினங்கள்
    அனைத்தையும் படைக்கின்றன.
    8.பிராணன் நீ தான்
    கடவுளுக்கு எதையும் எடுத்து செல்பவன்
    .முன்னோர்களுக்கு
    முதல் படையலை க்கொண்டு சேர்ப்பவன்.
    ஐம்புலன்களின் இயங்கு சூட்சுமம்
    நீயே இவ்வுடம்பின் மூலச்சத்து
    9.ஓ பிராணனே
    நீயே இந்திரன்,
    வலிமைமிக்க ருத்திரன் நீயே,
    காப்பவன் நீ
    விண்ணில் இயங்குபவன் நீ,
    நீயே கதிரோன்,
    அனைத்து ஒளியின் எஜமானன் நீ.
    10.பிராணனே நீ மழையை வர்ஷிக்க
    உயிரினங்கள் மகிழ்ச்சி பாவிக்கின்றன
    அவர்கள் விரும்பும்அந்த
    உணவுகிடைக்குமென
    நம்பிக்கை உண்டாகிறது
  2. ஓ பிராணனே
    நீயே தூயவனாய்த்தோன்றினாய்,
    நீயே விழுங்கும் நன்னெருப்பு,
    அனைத்தையும் புசிப்பவன்
    , உலகின் நற்கடவுள்,
    நாங்கள் படைப்பவர்கள்,
    நீயே காற்று
    நீயே காற்றின் தகப்பன்,
    12 பேச்சொலியில் வதிகிறாய்,
    காதில்,கண்ணில்,
    வெளி எங்கும் செல்லாது மனதில், நிலைக்கிறாய்
    எதையும் அனுகூலமாக்குகிறாய் பிராணனே.
    13.அனைத்துமே பிராணனின் கட்டுப்பாட்டில்.
    மூவுலகிலும் அப்படியே.
    ஒரு அன்னையைப்போல்
    எங்களைக் காப்பாற்று.
    வளமும் ஞானமும் வழங்கு.