
நான்
போகாத ஒரிசாவில்
நடந்த விபத்தை
என்னால்
கற்பனை செய்ய முடியவில்லை
எத்தனைப்
பேர்கள்
உயிரிழந்தார்களோ
எத்தனைப்
பேர்கள் கைகால்
இழந்து
நிரந்தர நோயாளிகளாக
மாறினார்களோ
இந்த
அதிர்ச்சியிலிருந்து
மீள
முடியாமல்
எத்தனைப் பேர்கள்
புத்திப் பேதலித்தார்களோ
எல்லோருக்கும்
என்ன சொல்வது?
வருந்துகிறேன்
என்பதைத் தவிர
