மீன் கடையில் /மனுஷ்ய புத்திரன்

‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனை
கையில் ஏந்திக்கொண்டோம்
தலைக்குமேல்
வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்
உதிர்ந்துகொண்டிருந்தன
இறந்த மீனோ
கையில் பற்ற முடியாதபடி
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது
‘கடலின் ஆழத்தில் இருக்கும்
அதே குளிர் இது ‘ என்றேன்
பதட்டத்துடன்
கடலை உணர்ந்துகொள்ள
ஒன்று அலையைத் தொட வேண்டும்
அல்லது
ஒரு மீனைத்தொட வேண்டும்

3.6.2023
இரவு 9.32