தொலைந்து போனவை/நாகேந்திர பாரதி


அடுப்புச் சுவற்றில் சமையல் வாசக்
கறுப்புக் கோலம்

மரக் கதவில் கீறிச் செதுக்கிய
மனித உருவம்

மாடப் பிறையில் சிந்திக் கிடந்த
சித்தநாதன் விபூதி

திண்ணைச் சிமெண்டைத் தேய்த்துக் கிடந்த
கோரைப் பாய்கள்

கோடி ரூபாய்க்கு விற்ற வீட்டோடு
சேர்ந்து தொலைந்தன

————