தவிப்பு/செ.புனிதஜோதி

அரை குறையாய்
வண்டி ஓட்டி
பழகியவள்
கோயில்
திருவிழாப் பாதையில்
எதிர்பாராமல்
நுழைந்துவிட்டால்
எப்படி திக்குமுக்காடுவாளோ
அப்படியாகத்தான்
என் மனம்
கையேந்தி நிற்கும்
சிறுமியிடம் திணறுகிறது
காசு இல்லாத நேரத்தில்

One Comment on “தவிப்பு/செ.புனிதஜோதி”

Comments are closed.