பிரஸ்னோபநிசதம்/ எஸ்.ஆர்.சி

திருதிய பிரஸ்னா

வினா 3

கவுசல்யர் மற்றும் பிப்பலாதர்

1.அஸ்வாலரின் குமாரர் கவுசல்யர் வினா வைத்தார்

.’ஓ பகவானே இந்த ப்பிராணன் எங்கிருந்து பிறக்கிறது?இந்த உடலினுள் எப்படி வருகிறது? எப்படி  உடலினுள் பிரிந்து பிரிந்து தங்குகிறது? எப்படி வெளியே செல்கிறது? உடலுக்கு வெளியிலும் உள்ளும் எப்படி  ஒர் ஆதார விஷயமாக இருக்கிறது?’

2. நீ நுணுக்கமான  வினாக்களை கேட்கலாம். நீ பிரம்மத்தைப் பற்றி வினா வைப்பவன் உனக்கு அவைகளை விளக்குவேன்.

3.ஆத்மாவிலிருந்து

பிராணன் பிறக்கிறது

.பிராணன் மனிதனுக்கு நிழல்போல்.

பிராணன் ஆத்மாவுக்கு நிழல் போல்.

 மனத்தின் செயல்பாட்டால்

 பிராணன் உடலினுள் செல்கிறது.

4. ஒரு அரசன் தனது அதிகாரிகளுக்கு ’ கிராமங்களில் தங்கி ஆட்சி புரியுங்கள்’ என்று உத்தரவு இடுவது போல் பிராணன் அதன் கீழ் உள்ள பிராணன்களுக்கு வேலைப்பங்கீடு செய்கிறது.

5. அபானா கழிவு உறுப்பிலும் பிறப்பு உறுப்பிலும் வதிகிறது. பிராணன் கண்,காது,வாய், மூக்கு ஆகிய உறுப்புக்களில் தங்குகிறது. சமானா உணவினை சமவிகிதத்தில் பிரித்து வழங்குகிறது. ஏழு அக்கினி அதனின்று எழுகிறது.

6. ஆன்மா இதயத்தில் உறைவது. இங்கு 101 நரம்புகள் உள்ளன.ஒவ்வொன்றிர்க்கும் 100 கிளைகள்.ஒவ்வொரு கிளைக்கும் 72000 சிறு கிளைகள். இங்கு வ்யானன் இயங்குகிறது.

100×101=10100×72000=727200000+10201=727210201

(10100+101=10201)

1.       ஒரு நரம்பின் வழி உதானன் மேல் ஏறுகிறது. நற்செயல்களால் புண்ய லோகத்திற்கும், இழி செயல்களால் பாவ லோகத்திற்கும், புண்யமும் பாவமும் கலந்த செயல்களால் மானிட உலகிற்கும் நம்மை அது இட்டுச்செல்கிறது.

2.       கதிரவன் வெளியில் தெரியும் பிராணன். கண்கள் வழி அது பிராணனுக்கு உதவுகிறது. பூமாதா அபானனை கீழ் இழுத்துக் கட்டுப்படுத்துகிறாள்.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிருப்பது ஆகாசம்- ஈதர்- அது சமானன்

காற்று  வ்யானன் ஆகிறது.

3.       வெளியில் இருக்கும் நெருப்பு உதானன். ஒருவன் உடலிலிருந்து பிரியும் நெருப்பு, அஃதாவது  உணர்வு  உறுப்புக்களை உள்வாங்கிய  மனம், வேறு உடலுக்கு ச்சென்றுவிடுகிறது.

14 இறப்பின் சமயம் எழும் நினைப்பு பிராணனோடு சேர்ந்து  பின் உதானனோடு சேர்ந்து ஜீவாத்மாவை  அது எண்ணிய உலகிற்கு இட்டுச்செல்கிறது.பிராணனை இப்படி அறிந்தவன் சந்ததி அழிவதில்லை. அவன்  என்றும் நிலைத்தவனாகிறான். அது பின் வருமாறு

4.       பிராணனின் தோற்றத்தை,  வருகையை அமர்தலை  பிராணனின் ஐந்து  பிரிவுகளை அவை   உடலினுள்  வியாபிக்கும்   அக நிலையை  அறிந்தவன், என்றும் நிலைத்தவனாகிறான். ஆம் சாகா நிலை எய்துகிறான்.