வழித்துணை/தங்கேஸ்

 

முன்னிருளில் வானம்

ஒரு பச்சை குழந்தை

மலங்க மலங்க விழித்தபடி

நிற்கிறது

அமர்த்தி வைத்துக்கொண்டு

மென்மையாக வருடிக் கொடுக்க

ஆசையாகத்தான் இருக்கிறது

ஒற்றை ஓர் இரவில்

நட்சத்திரங்கள் அனைத்துமே

காணாமல் போய்விடுவது

பெருந் துக்கம் தான் என்றாலும்

எண்ணங்களின்றி  துடைத்து வைத்த

மனதை வைத்துக் கொண்டு

என்ன செய்வது ?

வழித்துணைக்கு யாருமில்லையென்றாலும்

ஒரே ஒரு நினைவாவது

உடன் வர வேண்டாமா?