எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

மெய்நிகர் கூடுகையில் எஸ்ஸார்சி
10/6/23 அன்று வாசித்த கவிதை

சட்டத்தின் அழகு

அரிதா ஷா
ஏழுமாத இந்தியக்குழந்தை
அடிபட்டதாம்
ஆஸ்பத்ரிக்குப் போனார்கள்
பெர்லின் நகரின்குழந்தை நலஅமைப்பு
ஜூகன்டாம்டின் கொண்டு சேர்த்தது ஃபாஸ்டர்
ஹோமில்
தாயும்தந்தையும் பெற்ற
குழந்தையைக் கவனிக்கவில்லை
குற்றச்சாட்டு
நீதிமன்றம் விடுவித்தது குற்றம் ஏதுமில்லை அவர்கள்மீது
ஆண்டுகள் ரெண்டாகியும் குழந்தை பெற்றோரைச்சேரவில்லைஜெர்மன்தேசத்தில்
தவிக்கின்ற தாயும்தந்தையும்பிரதம
மந்திரி முதல்மந்திரி தெரிந்த எம்பிக்கள் எல்லோருடனும் மன்றாடுகின்றனர்
மனுக்கள்போட்டுப்போட்டு.

யாதுமாகி

என்வீட்டுத்தோட்டத்தில்
வாழைமரமுண்டு
ரஸ்தாளி. கட்டாயம்
இலைவேண்டும்அமாவாசைக்கு
மகிழ்ச்சிஇல்லைவாழைத்தார்போட்டாலோ
வீட்டில்அவளும்நானும்
இருவருக்கும்சர்க்கரை.
வாழைத்தார்வெட்டி
மரத்தைஅசமடக்கி
அதுபழுக்கக்காத்திருந்து
அக்கம்பக்கத்தார்க்குக்
கொடுக்கயார்கேட்டதுஇதுவென அவர்கள்வாங்கிக்
கொள்வதும்வீதியில்
பசுமாடு எப்போது வருமெனப்பழம்போடக்
காத்திருப்பதுமா வேலை
அருகிருக்கும்செல்லித்
தாய்க்கோயிலின்
சந்நிதியில்வைத்துவிட்டு
வருவேன் யாதுமாகிய அவளுக்கே அத்தனையும்.

நிராசை

உங்க அம்மாவையும்
உங்க அப்பாவையும்
கண்கலங்காமசந்தோஷமாவச்சிருக்கணும்
இல்லன்னா டைவர்ஸ்தான்னுசொல்றபொண்டாட்டியகண்ணாலபார்க்கணும் எல்லா கணவன்மார்களுக்கும்அடிமனத்தில்ஆசை
செவியுற்றபிரமன்
சொன்னார்முயன்று
முயன்றுதோற்றுப்
போனேன்நீவேறேதும்
ஆசைப்படு.இதுசாத்திய
மில்லைவிட்டுவிடு.

ரயில் விபத்து

பளாபளா வந்தேபாரத்ரயில்பார்த்துச்சந்தோஷப்பட்டேன்பச்சைக்கொடியும்சிவப்புக்
கொடியும்பெரியபெரிய
மனிதர்கள்வைத்திருந்தார்கள்
கம்பீரமாய். ரயில்எஞ்சினுக்கு
எதுபிரணானோஅது
வாங்கிப்போடாமல்
சந்தனப்பொட்டோடுகுங்குமம்அப்பி அப்பி அலங்காரம்செய்தகதை
அம்பலமாகியதுஒரிசாவில்மூன்றுரயில்கள் முட்டிமுந்நூறுபேர் மரணம்.

One Comment on “எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்”

Comments are closed.