
கடற்கரை ஓரத்தில்
காலை வேளையில்
துள்ளி விளையாடும்
குழந்தைகள்
நண்பர்களுடன்
பேசிச் சிரித்து நடப்பவர்கள்
சுத்தமான காற்று
அகன்ற கடல்
மேலும் கீழும் ஓயாமல் குதிக்கும் அலைகளில்
மின்னும்
ஒளிக் கீற்றுகள்..
பார்த்து மகிழ்ந்து
நடக்கையில்
தோன்றுகிறது
ஒரு கணம்….
இவை எல்லாமே
வாழ்வின் பிரதிபலிப்போ
வாழ்வின்
பிரமாண்டத்தையும்
ஏற்ற தாழ்வுகளையும்
ஒளியையும்
இருட்டையும்
நினைவூட்டுகின்றனவோ!

இரவும் பகலும் போல தான்
ஒளியும் இருட்டும்.
நல்ல கருத்து.