இனிக்கும் தமிழ் – 183/டி வி ராதாகிருஷ்ணன்

நன்னெறி – அறிவும் புலன்களும்

அடக்கம் உடைமை அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார்

ஒருமையுள் ஆமைபோள் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து (126)

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப்
போல,ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக்
காவல் அரணாக அமையும்

புலனடக்கம் வேண்டும்

நன்னெறி சொல்கிறது ..புலனடக்கம் அறிவுள்ளவர்களை ஒன்றும் செய்யாதாம்

ஐந்து புலன்களும் மனிதர்களை அலைக் கழிக்கும். ஆனால், அறிவுள்ளவர்களை அந்த
ஐந்து புலன்களும் ஒன்றும் செய்யாது. அறிவில்லாதவர்கள்தான் அந்த புலன்கள்
பாடாய் படுத்துமாம்

சூறாவளி காற்று சிறு துரும்பை சுழற்றிப் போடும், ஆனால் கல் தூண் அசையாமல் நிற்கும்.

பாடல்

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் – துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.

பொருள்

பொய்யான இன்பத்தைத் தரும் புலன்கள்.ஐந்து புலன்களும் நோய் செய்யும்
அறிவில்லாத புல்லியர்களுக்கு.
உண்மையான அறிவு உடையவர்களை..அவை பற்றாது

வலிமையான் சுழன்று அடிக்கும் சூறாவளி காற்று,சுழற்றும் சிறிய
துரும்பை.கல்தூணை எதுவும் செய்யாது