
தந்தையர் தினம் கருதி இன்று. எழுதிய கவிதை.
தந்தையரைக் கொண்டாட ஒரு நாள் போதுமா?
ஒரு யுகம் கூட போதாதே, என்ன செய்வேன்?
தந்தை ,அவர் குடும்பத்தின் பெரும் தூண்,
குல வம்சத்தைத்
தாங்கி நிற்கும் கொடி மரம்.
பல நேரங்களில் கண்ணீர் விட முடியாமல் முழுங்கி நிற்கவும்
சில சமயங்களில் தனிமையில் புழுங்கியும் நிற்பவர்.
பெண் குழந்தைகளின் கதா நாயகன்,
ஆண் பிள்ளைகளுக்கு கர்ஜனை சிங்கம்,
உரலுக்கு ஒருப் பக்கம் இடி என்றால்
மனைவி மத் தளத்தின் இருபக்க அடி அல்லவோ?
வாழும் வகை சொன்ன தந்தை
வீழாமல் தூக்கி நிறுத்திய ஏணிப்படி,
உழைப்பை நம்பி உடலை தேய்த்து
உயிரினும் மேலான அன்பை மறைத்து
உலகை நீத்து தன்னை புதைத்துக் கொண்டு
அப்பா என்ற ஆல மரம் விழ
இனி எங்கே அந்த நிழல்?

நன்றி