
என் அப்பா ..
அவருக்கு நான் எந்த
வகுப்பு
படிக்கிறேன் என்பதே தெரியாது..நிசம்தான்.
யாரேனும் வந்தால்
எத்தனாப்பூ நீ
என்று கேட்பார்.
ஒன்று மட்டும்
தெரியும் அவருக்கு;
சிறுக்கும் என் முகம்
கண்டு;கசங்கும்
மனம் அறிவார்
எப்படியோ; என்ன
மாயமோ; என்
சங்கதி அனைத்தும்
சொல்லாமலே அறிவார்;
அவர் மடி பஞ்சணை
எந்நாளும்
எனக்கே, சந்தன பௌடர் வாசம்
இன்றும் என் தலையணையில்.
18-6-2023

அருமை.