
(Drawing by P R Girija )
பூனை மனத்தில் இருந்தது
மனத்தில் பூனை
பசியோடு இருந்தது
பசித்த பூனையின்
மனத்தில்
எலி தோன்றியது
எலியைப் பார்த்த
அவசரத்தில்
மனத்தின் பூனை நழுவிக்
காகிதத்தில் விழுந்தது
எசகு பிசகாக
விழுந்த அவஸ்தையில்
இலேசாகக் குரல்
எடுத்த போது
மியாவ் ஒலி
கொஞ்சம்
கர கரத்து
உறுமலாகக் கேட்டது
காகிதத்தின் அருகே
நடுங்கிக் கொண்டிருந்த சுண்டெலி
மெல்ல விட்டது
நிம்மதிப் பெருமூச்சு!

Sooper
சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்
அருமை. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்
வரைந்தது என்னவோ பூனை.
ஆனால் கண்களில் புலிப் பார்வையல்லவா தெரிகிறது.
Super