
என்பா-1
கடுஞ்சொல் வீசாத
அன்புள்ள கணவன்..
படும்பாடறிந்து பக்குவமாய்
இருக்கும் மக்கள்..
பரிவாய் பழகும்
மருமகள் மருமகன்..
வாழ்க வாழ்க வாழியவே.
என்பா-2
வருடம் ஒருமுறை
வாடகை கூட்டி
கேட்காத வீட்டு
உரிமையாளர் அவர்
சீரமைப்பு பணிகளை சிறப்புடன் செய்பவர்
வாழ்க வாழ்க வாழியவே
என்பா-3
ஒருநாளும் நான்
குடக்கூலி கேட்டதில்லை..
எந்நாளும் அவர் புகார் புகன்றதில்லை..
மனையை
பேணி வைத்திருக்கும் வாடகையாளர்
வாழ்க வாழ்க வாழியவே.
என்பா-4
காலை மாலை
என் மனை
குப்பை கூளம்
துப்புரவு செய்து
சிறு கோலமிட்டு
சிறப்பிக்கும் சின்னத்தாய்
வாழ்க வாழ்க வாழியவே.
20-6-2023
