வாழ்க வாழ்க வாழியவே/கேள்விக்காரன்…

நேற்றும் இன்றும்
நாளையும் வளரும்
தேயும் மானுடர் வாழ்வில் நாளும்
நாளும்
பெருகும் நம்பிக்கை கீற்றொளிச் சுடர்
வாழ்க வாழ்க வாழியவே

💐💐💐💐💐💐💐

ஓடும் பஸ்ஸில்
அடைத்த நெரிசலில்
பிடித்த சீட் தத்தம் செய்து
பிணி முதுமை அமர்த்தும் முதுமை
வாழ்க வாழ்க வாழியவே

💐💐💐💐💐💐💐💐

பிளாட்பார்ம் அமர்ந்து.
பிரிஞ்சிப் பொட்டலம்
பிரித்து நாய்
பூனைக்கும் இடும்
சமரச பசியாற்றும் பிச்சைப்பாரி நீடு
வாழ்க வாழ்க வாழியவே

💐💐💐💐💐💐💐💐

சாப்பிட்ட ஓட்டலில்
பில் கட்ட முயன்ற
போது பேண்டில்
காணா தொலைந்த
பர்ஸ் பகீர் பயம் துடைத்த முகமறியான்
வாழ்க வாழ்க வாழியவே

💐💐💐💐💐💐💐💐

பள்ளிப் பிள்ளைகள்
வீடு திரும்பலில்
வம்பாய் இடித்த
பைக் ஓட்டியை
சட்டென்று சிகை பிடித்து அறைந்த
சகமாணவி துணிவில் வீராங்கனை தரிசனம் !
வாழ்க வாழ்க வாழியவே

💐💐💐💐💐💐💐💐

பிளாட்பார்ம் நகரும்
ரயிலிலிருந்து
சுடச்சுட உணவுப் பொட்டலத்தை கைப்பிள்ளை
தாய்க்கரம் சேர்த்த
கருணைக் கைகள்
வாழ்க வாழ்க வாழியவே

20/06/2023
நண்பகல் மணி:12:00