பூனை நல்ல பூனை/சசிகலா விஸ்வநாதன்

1.

நீல நிற கண்களோடு ஒன்று

உருக்கி விட்ட தங்க கண்களோடும்

மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு

பூனை நல்ல பூனை


2.

ஒரு கண் பார்வை இல்லா

சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப்

பார்க்க, மனம் மயங்கி சொல்லியது;

பூனை நல்ல பூனை