
என்பா 133
முதியவராக மாறும்போது
பணம் வேண்டும்
யார் தயவும்
நாடாமல் இருக்க
வேண்டும்.
அப்படி இருந்தால் போதும்
வாழ நினைத்தால் வாழலாம்.
என்பா 134
என் நண்பர்
விபத்தில் முதுகு
தண்டுவடம் ஒடிந்தது
அவருடைய விடாமுயற்சியால்
அசாத்தியமான மனநிலையில்
இன்னும் இருக்கிறார்
வாழ நினைத்தால் வாழலாம்
என்பா 135
ஏன் இப்படி
இருக்கிறார்களென்று
சிலரைப்
பார்த்தால் தோன்றாமலில்லை
அவர்களைப்போல்
ஒருபோதும்
இருக்கக்கூடாது.
ஆசை எதுவுமில்லாமல்
நாம்
வாழ நினைத்தால் வாழலாம்
என்பா 136
வாக்கிங் போய்விட்டுத்
திரும்பும்போது வெங்கடேஸ்வரா
போளிக் கடையில்
உருளைக்கிழங்கு
போண்டா
ஞாபகம் வருகிறது தினமும் இப்படியும்
வாழ நினைத்தால் வாழலாம்
என்பா 137
எனக்கு வயது
எழுபெதன்றேன்
எனக்கும்
வயது எழுபத்தைந்து
என்றாள்
அவளைப் பார்த்துப்
புன்னகைத்தேன். இருவரும்
வாழ நினைத்தால் வாழலாம்
என்பா 138
வாழ்க்கை உருண்டோடிக்
கொண்டிருக்கிறது. நாட்கள்,
பறந்தோடிக் கொண்டிருக்கிறது
வயது கூடிக்கொண்டே
போகிறது. ஆசை
மட்டும் அடங்கவில்லை
வாழ நினைத்தால் வாழலாம்
